ETV Bharat / international

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: போராட்டக்காரர்களுக்கு கோரிக்கை விடுத்த போப்!

author img

By

Published : Jun 3, 2020, 7:39 PM IST

Updated : Jun 3, 2020, 10:24 PM IST

வாடிகன்: இனவாதத்தைக் கண்டும்காணாமல் செல்லமுடியாது என்று கூறியுள்ள போப் பிரான்சிஸ், போராட்டக்காரர்களை அமைதி காக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

pope francis us rascisam ஜார்ஜ் ஃப்ளாய்டு கறுப்பர் மரணம் அமெரிக்கா போராட்டம்
ஜார்ஜ் ஃப்ளாய்டு கொலை குறித்து போப் கருத்து

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்பவர் காவல் துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு, உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிரான போரட்டம் தீவிரமடைந்துவருகிறது. பல்வேறு நாடுகளிலும் இச்சம்பவத்தைக் கண்டித்து போரட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதைக் கண்டித்த போப் பிரான்சிஸ், அச்சம்பவம் தன்னை வெகுவாகப் பாதித்தது எனத் தெரிவித்துள்ளார். மேலும், அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்காக பிரார்த்திப்பதாகத் தெரிவித்த போப், இனவாதத்தைக் கண்டும்காணாமல் செல்ல முடியாதென்று தெரிவித்துள்ளார்.

வன்முறையால் போராட்டக்காரர்கள் எதையும் பெறமுடியாது என்று சுட்டிக்காட்டிய அவர், வன்முறை இழப்பை மட்டுமே தரும் என்றும், தேச அமைதிக்காகப் போராட்டக்காரர்கள், அமைதி காக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Last Updated : Jun 3, 2020, 10:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.