ரோம் (இத்தாலி) : இத்தாலி தலைநகர் ரோம் நகருக்கு இரண்டாவது முறையாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி வாட்டிகன் சிட்டியில் போப் ஃபிரான்சிஸை இன்று (அக்.30) சந்தித்து உரையாடுகிறார்.
இந்தத் தகவலை வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்கலா உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் அழைக்கப்பட்டார். அவர் புனிதரை (போப் ஃபிரான்சிஸ்) சந்தித்து பேசுவார். அவரின் ஆலோசனைக்கு பின்னர் குழுவினருடன் பேச்சுவார்த்தை தொடரும்” என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள அக்.29ஆம் தேதி இத்தாலி புறப்பட்டு சென்றார். இந்தக் கூட்டம் நாளை (அக்.31) வரை நடக்கிறது.
கடந்த ஆண்டு கோவிட் பரவல் காரணமாக ஜி20 மாநாடு காணொலி வாயிலாக சௌதி அரேபியாவில் நடைபெற்றது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : கரோனா - போப் ஆண்டவர் தனிமையில் பிரார்த்தனை!