கிரீஸ் நாட்டு செய்தியாளருக்கு சாதாரண நாள், வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக மாறியுள்ளது. லாஸோஸ் மன்டிகோஸ் என்ற செய்தியாளர், கினிடா (Kineta) பகுதியின் வெள்ள பாதிப்புகள் குறித்த செய்திகளை நேரலையில் விவரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென்று காட்டுப்பன்றி அவரை நேரலையில் பேச விடாமல் துரத்த முயற்சித்தது. பன்றியிடமிருந்து தள்ளி தள்ளி சென்று செய்தியாளர் பேசுவது சிரிப்பலையை உண்டாக்கியது. அவர் அந்த நேரலையில் கூறுகையில்," அய்யோ காலையிலிருந்து என்னை ஒரு பன்றி துரத்திக் கொண்டிருக்கிறது. என்னால் நிற்க முடியவில்லை. என்னை கடிக்கிறது" எனத் தெரிவித்தார்.
-
Greek journo pestered by a pig while reporting on the recent floods in #Kinetta #Greece #tv #bloopers #ant1tv #Ant1news pic.twitter.com/vsLBdlWCMB
— Kostas Kallergis (@KallergisK) November 26, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Greek journo pestered by a pig while reporting on the recent floods in #Kinetta #Greece #tv #bloopers #ant1tv #Ant1news pic.twitter.com/vsLBdlWCMB
— Kostas Kallergis (@KallergisK) November 26, 2019Greek journo pestered by a pig while reporting on the recent floods in #Kinetta #Greece #tv #bloopers #ant1tv #Ant1news pic.twitter.com/vsLBdlWCMB
— Kostas Kallergis (@KallergisK) November 26, 2019
இந்தக் காட்சிகள் அனைத்தும் தொலைக்காட்சியில் நேரலையாக சென்றது. அவருடன் பேசிக்கொண்டிருந்த செய்தியறையிலிருந்த குழுவினரும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினர். இந்தக் காட்சிகள் அனைத்தும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ரூ. 10 கோடி செலவிட்டு உருவாக்கிய கதாபாத்திரத்தைத் தவறுதலாக ரூ.40 ஆயிரத்திற்கு விற்ற நண்பன்!