ETV Bharat / international

வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைகளைப் பார்க்க உக்ரைன் வந்த தம்பதிகள்! - உக்ரைன் வாடகை தாய் மூலம் பிறந்த குழந்தை

கீவ்(Kyiv): ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் தவித்துவந்த தம்பதிகள், வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைகளைப் பார்க்க உக்ரைன் வந்துள்ளனர்.

Parents meet surrogate babies stranded in Ukraine

author img

By

Published : Jun 11, 2020, 10:17 AM IST

உக்ரைன் நாட்டில் வாடகைத் தாய் முறை அதிகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாத‌த்திற்கு பின், வெளிநாடுகளிலிருந்து உக்ரைனிற்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இதனால் தலைநகர் கீவ்வில் வாடகைத் தாய் மூலம் பிறந்த தங்களது குழந்தைகளை நேரில் பார்க்க முடியாமல் தம்பதிகள் தவித்துவந்தனர்.

இதனையடுத்து குழந்தைகளைக் காண உக்ரைன் வருவதற்கு தங்களுக்கு பாஸ் வேண்டுமென 100-க்கும் மேற்பட்ட தம்பதிகள் அந்நாட்டு அரசிடம் வேண்டுகோள்விடுத்தனர். இதனைப் பரிசீலித்த அரசு, 80 தம்பதிகள் வர அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில் 31 தம்பதிகள் தங்களது குழந்தைகளை வாங்கிச் செல்ல வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் இரண்டு வார தனிமைப்படுத்தலுக்குப் பின்னர் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அர்ஜென்டினாவிலிருந்து வந்த ஆண்டிரியா டெய்ஸ் (Andrea Diez) கூறுகையில், "எனது குழந்தையை தற்போது காண்கிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

இதையும் படிங்க...'இனிமேல் யாரும் கருமுட்டை தானம் செய்யாதீங்க' - அனுபவத்தைப் பகிரும் பெண்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.