சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், ஐநா மன்றத்தின் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது அமர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டுக்குள்ளே தங்களது இனவிடுதலைக்காக போராடும் பலூச்சி, பஷ்டூன் போன்ற தேசிய இனங்களின் செயல்பாட்டாளர்களால், பாகிஸ்தான் அரசை அம்பலப்படுத்தும் வகையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
பயங்கரவாத அமைப்புகளை இனப்பெருக்கம் செய்வதில், பாகிஸ்தான் இராணுவ ஸ்தாபனத்தின் ஈடுபாட்டை எதிர்த்து இப்போராட்டத்தை நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். உலக பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதத்தின் மீது கவனத்தை ஈர்க்கவும், சர்வதேச பயங்கரவாதத்துடன் அனுசரணையான போக்கைக் கடைபிடிக்கும் பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு பலூச்சி, பஷ்டூன் இனங்களின் செயல்பாட்டாளர்கள், இந்த போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், தாலிபான் போன்ற பயங்கரவாதக் குழுக்களுடன் இணைக்கப்பட்ட சர்வதேச பயங்கரவாதிகளின் மையமாக பாகிஸ்தானின் எல்லையான வடக்கு வஜீரிஸ்தான் மாறியிருக்கிறது. பாகிஸ்தான் அரசாங்கம் பயங்கரவாத குழுக்களுக்கு தீவிரமாக நிதியளிப்பதன் மூலம் பிராந்தியத்திலும், அதற்கு அப்பாலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தானின் கட்டுப்பாடற்ற நிதி அமைப்பு, பல நாடுகளில் முளைத்து நிற்கும் பயங்கரவாதத்திற்கு உறுதுணையாக இருக்கிறது.
பாகிஸ்தானில் இயங்கும் இந்த பயங்கரவாதிகளால் சட்ட ஒழுங்கை சீர்க்குலைக்கவும், நிதி திரட்டவும், ஒருங்கிணையவும், எளிதில் செயல்படவும் முடியும் முடிகிறது. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் இந்தப் பிரச்சினையை சமாளிக்க பாகிஸ்தான் அரசால் இயலவில்லை.
எனவே, பாகிஸ்தான் அரசை ஐநா மன்றம் கண்டிக்க வேண்டும் என, இந்த செயல்பாட்டாளர்கள் கோருகின்றனர். பாகிஸ்தான் நாட்டுக்குள்ளே தங்களது இனவிடுதலைக்காக பலூச்சி, பஷ்டூன் போன்ற தேசிய இனங்கள் ஆயுதவழியிலும் அரசியல் வழியிலும் போராடி வருவது கவனிக்கத்தக்கதாகும்.
இதையும் படிங்க : ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போர் : அமெரிக்கா-தலிபான் இடையே இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து