ETV Bharat / international

'ஒரு மருந்து ஆனால் டபுள் பாதுகாப்பு' கரோனா மருந்து சோதனையில் வெற்றியை நோக்கி ஆக்ஸ்போர்டு!

லண்டன்: உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரசுக்கான மருந்தில் இரட்டை பாதுகாப்பு உள்ளதாகவும், பரிசோதனை முடிவு நல்லபடியாக வந்துள்ளதாகவும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு
ஆக்ஸ்போர்டு
author img

By

Published : Jul 16, 2020, 10:55 PM IST

உலகளவில் கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்திவருகின்றது. தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் காணப்படுகின்றது. வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் பல முன்னணி நாடுகளின் விஞ்ஞானிகள் களமிறங்கியுள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது பரிசோதனையில் உள்ளது. இந்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள கரோனா வைரசுக்கான மருந்தில் இரட்டை பாதுகாப்பு உள்ளதாக, ஆரம்பக்கட்ட சோதனை முடிவில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், " தடுப்பூசியின் தாக்கத்தைக் கண்டறிய இங்கிலாந்து தன்னார்வலர்களின் குழுவிலிருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள் மீது பரிசோதனை செய்யப்பட்டன. அப்போது, உடலில் ஆன்டிபாடிகள் மற்றும் கில்லர் டி-செல்கள் ஆகிய இரண்டும் உற்பத்தியாவது உறுதியானது.

ஆன்டிபாடிகள் சக்தி சில மாதங்கள் மட்டுமே உடலில் இருக்கும். ஆனால், டி-செல்கள் தாக்கம் பல ஆண்டிற்கும் உடலில் தங்குவதால் வைரஸ் தாக்கத்தை முற்றிலுமாக தடுக்க முடியும்" என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

ஆக்ஸ்போர்டு பரிசோதனைக்கு ஒப்புதல் அளித்த பெர்க்ஷயர் ஆராய்ச்சி நெறிமுறைக் குழுவின் தலைவர் டேவிட் கார்பெண்டர் கூறுகையில், "தடுப்பூசி முற்றிலும் சரியான பாதையில் உள்ளது. தடுப்பூசி மருந்து வெளியாகும் தேதியை சரியாக தெரிவிக்க முடியவில்லை.

இருப்பினும், நிச்சயமாக செப்டம்பர் மாதத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மருந்து செயல்பாட்டுக்கு வரும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

இதே போல், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் நிறுவனம், அஸ்ட்ராஜெனெகா என்ற கரோனா மருந்தை கண்டுபிடித்துள்ளனர். அந்த மருந்தின் மூன்றாம்‌ கட்ட பரிசோதனையில் ஆயிரம்‌ பேர் மீது பரிசோதிக்கவுள்ளனர்.

இந்த மருந்து செலுத்துவதினால் ஏற்படும் தாக்கம் குறித்தும், நோய் எதிர்ப்புத் தன்மை குறித்தும் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா வைரசுக்கான தடுப்பூசி மருந்தாக, இந்தியா தரப்பில் கோவாக்சின் கண்டுபிடிக்கப்பட்டு மனிதன் மீது செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளும் கட்டத்தில் உள்ளது. இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளும் கரோனா மருந்து கண்டுபிடிப்பதில் முன்னிலை வகிக்கின்றனர். தற்போது, அந்த வரிசையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.