ETV Bharat / international

விரைவில் ஒமைக்ரான் பேரலை... 2 டோஸ் தடுப்பூசிப் பூசி பயனளிக்காது.. - ஒமிக்ரான் அறிகுறி

விரைவில் ஒமைக்ரான் பேரலை வீசும் என்றும் 2 டோஸ்கள் தடுப்பூசிகள் ஒமைக்ரானுக்கு எதிராக பயனளிக்காது என்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

விரைவில் ஒமைக்ரான் பேரலை
விரைவில் ஒமைக்ரான் பேரலை
author img

By

Published : Dec 13, 2021, 5:27 PM IST

Updated : Dec 13, 2021, 5:42 PM IST

லண்டன்: கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துவரும் நிலையில், உலகம் முழுவதும் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வந்தது. இதனிடையே கரோனா உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ் என்று மக்களிடையே பீதியை கிளப்பியது. இந்த நிலையில், உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதுவரை ஆந்திரா, சண்டிகர், மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 37 பேருக்கு ஒமைக்ரான் தொற்று வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பரவல் தீவிரமாக இருக்கும்

உலக சுகாதார அமைப்பு உருமாற்றம் அடைந்த புதிய கரோனா வைரஸான ஒமைக்ரான், மற்ற வேரியண்டுகளைவிட அதிக ஆபத்து கொண்டது என்றும் வேகமாக பரவக்கூடியது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்காரணமாக, உலக நாடுகள் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்காவில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக அவசரக்கால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விரைவில் ஒமைக்ரான் பேரலை

இதனிடையே பிரிட்டனில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், "விரைவில் ஒமைக்ரான் பேரலை ஏற்படக்கூடும். இதற்கு எதிராக போடப்பட்ட 2 டோஸ் கரோனா தடுப்பூசிகளும் பயன் அளிக்காது. மக்கள் மூன்றாவதாக பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டால் பாதிப்பு குறைய வாய்ப்புள்ளது. எனவே மக்கள் பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். பிரிட்டனில் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள அடுத்த வாரத்தில் முகாம்கள் தொடங்கவிருக்கிறது. 2ஆவது டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் 3 மாத கால இடைவெளியில் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஒமைக்ரான் அச்சம்: தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் அடைப்பு?

Last Updated : Dec 13, 2021, 5:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.