இதுகுறித்து 'தி அப்சர்வர்' பத்திரிகைக்குப் பேட்டியளித்திருந்த உலக சுகாதார அமைப்பின் சிறப்புப் பிரதிநிதி டேவிட் நாபோரோ, "எல்லா வைரஸுக்கும் பாதுகாப்பான, திறன்மிக்க தடுப்பூசிகள் உருவாக்குவதற்கான தேவை எழாது. சில வைரஸ்களுக்குத் தடுப்பூசி உருவாக்குவது மிகவும் கடினம்.
ஆகையால், எதிர் வரும் மாதங்களில் தடுப்பூசி இல்லாமல் ஆபத்தை எதிர்கொள்ளும் வழிகளை நாம் கண்டறிய வேண்டும்.
நோய் அறிகுறியும் நபர்களையும்; அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களையும் தனிமைப்படுத்தல், முதியவர்களைப் பாதுகாத்தல், அதிகளவில் நோயாளிகளைக் கையாளத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல் அவசியம்" என்றார்.
உலகையே புரட்டிப்போட்டு வரும் கோவிட்-19 நோய்க்கான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன.
கிட்டத்தட்ட 44 தடுப்பூசிகள் தயாரிப்பின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளதாகவும், முதல் தடுப்பூசி தயாராக 12லிருந்து 18 மாதங்கள் வரை ஆகும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கோவிட்-19 தடுப்பூசி தயாரிப்பில் பெய்ஜிங் பயோடெக்னாலஜி இன்ஸ்டிட்டியூட், அமெரிக்காவைச் சேர்ந்த மார்டெர்னா ஆகியவை முன்னணியில் உள்ளன.
இதையும் படிங்க : ஜப்பானில் 10 ஆயிரம் பேருக்கு கோவிட்-19!