ETV Bharat / international

பிரதமர் மோடி ரஷ்ய அதிபருடன் தொலைபேசியில் உரையாடல் - ரஷ்யா உக்ரைன் சமீபத்திய செய்திகள்

பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினுடன், ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பாக தொலைபேசியில் உரையாடினார்.

Narendra Modi spoke on telephone with Vladimir Putin
புதினுடன் மோடி தொலைபேசியில் உரையாடல்
author img

By

Published : Feb 25, 2022, 7:14 AM IST

மக்களை காப்பதற்காக ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறிய ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனுக்கு எதிராக போர் பிரகடன் செய்தார். இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது , உக்ரைன் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து புதின் விவரித்தார்.

வன்முறையை விடுத்து ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தையை முன்னெடுத்து ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள், குறிப்பாக மாணவர்களின் நிலை கவலையளிப்பதாக புதினிடம் மோடி தெரிவித்துள்ளார். அவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: பெர்லின், கொரியா தற்போது உக்ரைன்: ரஷ்யாவின் போர் தந்திரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.