கரோனா தொற்று உலகெங்கிலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் சுமார் 50 நாடுகள் மக்களை வீட்டில் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளன. இதில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சில நாடுகள் கட்டாய ஊரடங்கை வலியுறுத்தி உள்ளன. சில நாடுகள் மக்களை வீட்டிலேயே தங்குமாறு அறிவுறுத்தி உள்ளன. 34 நாடுகள் கட்டாய ஊரடங்கை பின்பற்றுகின்றன. இதில் சுமார் 659 மில்லியன் மக்கள் அடங்குவர்.
பிரான்ஸ், இத்தாலி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஈராக், கலிஃபோர்னியா போன்ற நாடுகள் இந்த கட்டாய ஊரடங்கில் அடங்கும்.
இதையும் படிங்க... கரோனா பாதிப்பைக் கருத்தில்கொண்டு குடிநீர் ஆலைகள் தற்காலிகமாக இயங்க அனுமதி!