ETV Bharat / international

’கிரேக்க தேசிய மலர், லாவண்டர்களால் ஆன மலர் வளையம்’ - இளவரசர் பிலிப்புக்காக அனுப்பிய மேகன் - ராணி எலிசெபத்

அமெரிக்காவில் வசித்து வரும் மேகன், இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கில் பங்கேற்காத நிலையில், அவரது உடலுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தான் கைப்பட எழுதிய குறிப்பு ஒன்றையும், பிரத்யேக மலர் வளையம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

மேகன்
மேகன்
author img

By

Published : Apr 19, 2021, 11:31 AM IST

இங்கிலாந்து இளவரசரும், ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவருமான பிலிப் தனது 99ஆவது வயதில், கடந்த 9ஆம் தேதி வின்சர் கோட்டையில் காலமானார். அரச குடும்ப வரலாற்றில் நீண்ட காலம் இளவரசராக இருந்த பெருமைக்குச் சொந்தக்காரரான பிலிப்பின் இறுதிச்சடங்கு நேற்று முன் தினம் (ஏப்.17) வின்சர் கோட்டை வளாகத்தில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெற்றது.

இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு

தொடர்ந்து, பிலிப்பின் உடல், தேவாலயத்தின் அடியில் உள்ள கல்லறைப் பகுதியான ராயல் வால்ட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த இறுதி ஊர்வலத்தில் இளவரசர்கள் வில்லியம், ஹாரி, அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் உள்பட 30 பேர் மட்டும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இந்த இறுதிச்சடங்கில், அமெரிக்காவில் தற்போது வசித்து வரும் இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் கருவுற்றிருக்கும் காரணத்தால் பங்கேற்கவில்லை. இந்நிலையில், இளவரசர் பிலிப்பின் உடலுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தான் கைப்பட எழுதிய குறிப்பு ஒன்றையும், பிரத்யேக மலர் வளையம் ஒன்றையும் மேகன் அனுப்பி வைத்துள்ளார்.

கிரேக்க தேசிய மலரால் ஆன மலர்வளையம்

இந்த மலர்வளையத்தை மேகன்-ஹாரி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மலர் வேலைபாடுகள் செய்து கொடுத்த வில்லோ கிராஸ்லி என்பவர், தனக்கு சொந்தமான தோட்டத்தில் வளர்த்து வந்த மலர்களைக் கொண்டு பிரத்யேகமாக வடிவமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளவரசர் பிலிப் பிறந்த கிரேக்க நாட்டின் தேசிய மலரான அகந்தஸ் மோலிஸ் ( Acanthus mollis) உள்ளிட்ட மலர்களாக் கொண்டு இந்த மலர் வளையம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நன்றியுணர்வு, அர்ப்பணிப்பு, நீடித்திருக்கும் அன்பு உள்ளிட்ட பண்புகளை குறிக்கும் வகையில் காம்பானுலா, ரோஸ்மேரி, லாவெண்டர் ஆகிய மலர்களும் இளவரசர் பிலிப் பிறந்த மாதமான ஜூன் மாதத்தைக் குறிக்கும் வகையில் ரோஜாக்களும் இந்த மலர் வளையத்தில் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாத்தா குறித்து ஹாரி

கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி தன் தாத்தா குறித்து நினைவுகூர்ந்த ஹாரி, "என் தாத்தா சேவை, மரியாதை மற்றும் சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்ட மனிதர். கூர்மையான மதிநுட்பம், புத்திசாலித்தனத்துடன் விளங்கினார். அவரது வசீகரம் காரணமாகவும், அடுத்து அவர் என்ன சொல்வார் என யாராலும் யூகிக்க முடியாத காரணத்தாலும் அனைத்து இடங்களிலும் அவர் கவனம் ஈர்ப்பார்” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், “இளவரசர் பிலிப், நீண்டகால ஆட்சியாளர், சேவையாளர், இளவரசர், டியூக் என்றெல்லாம் நினைவுகூரப்படுவார். ஆனால் சென்ற ஆண்டின் வலியில் மனதிற்கு நெருங்கிய நபரையோ அல்லது தாத்தாவை இழந்த உங்களில் பலரைப் போலதான் நானும் உணர்கிறேன். ஒரு நல்ல பார்பிக்யூ மாஸ்டர், தலை சிறந்த வேடிக்கை மனிதர், இறுதி வரை துடுக்குத்தனத்துடன் வலம் வந்தவர் என் தாத்தா” எனவும் குறிப்பிட்டார்.

மேலும், 73 ஆண்டு திருமண வாழ்வில் தன் பாட்டி இரண்டாம் எலிசபெத்துக்கு தூணாக விளங்கியவர் எனவும் குறிப்பிட்ட ஹாரி, " உலகம் உங்களை இழந்து வாடினாலும், என்றைக்கும் அனைவரது நினைவிலும் நீங்கள் இருப்பீர்கள். மேகன், ஆர்ச்சி, நான், உங்கள் வருங்கால பேத்தி என எங்கள் அனைவரது இதயங்களிலும் என்றுமே நீங்கள் ஒரு சிறப்பான இடத்தை தக்கவைத்திருப்பீர்கள்” எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மேகனை நிறம் சார்ந்து பிரிட்டன் அரச குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகத் தெரிவித்து ஹாரி-மேகன் தம்பதியினர் அரச குடும்பத்திலிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தாத்தாவுக்காக தாயகம் திரும்பிய இளவரசர் ஹாரி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.