ஐரோப்பிய ஒன்றிய நாடான ஜெர்மனியின் ஹெசே மாநிலத்தில், ஹநவ் என்ற நகரம் அமைந்துள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை இந்நகரத்தின் இரு வேறுப்பகுதிகளில் அடையாளம் தெரியாத கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தில், எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், ஐந்து பேர் காயமடைந்ததாகவும் அந்நகர காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதையொட்டி, நிகழ்விடங்கள் சீல் வைக்கப்பட்டு, அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்துச் சென்றுள்ளனர்.
தப்பிச் சென்ற குற்றவாளியை காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க : 'பெரிய டீல் குறித்து பிறகு பார்த்துக்கொள்ளலாம்' - ட்ரம்ப் திட்டவட்டம்