பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசில் இன்று (செப். 30) திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒட்டுமொத்த நகர் முழுவதிலும் இந்தச் சத்தம் கேட்டதை அடுத்து, ஏதேனும் பெரிய வெடிவிபத்து ஏற்பட்டதோ என்ற அச்சம் உருவானது.
முதலில், இந்தச் சத்தத்தை உறுதிசெய்த அந்நாட்டு காவல் துறை இதன் காரணத்தை உடனடியாக ஆராய்ந்தபோது இந்தச் சத்தம் வெடிவிபத்தின் காரணமாக ஏற்படவில்லை எனத் தெரியவந்தது. அங்குள்ள சூப்பர்சோனிக் ஜெட் விமானம் பறந்ததால் ஏற்பட்ட சத்தமே இந்தப் பதற்றத்துக்கு காரணம் என அந்நாட்டு காவல் துறை விளக்கமளித்தது.
ஜெட் விமானத்தில் ஏதோ தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாகவே இந்த அதீத சத்தம் எழுந்துள்ளது. பாரீசில் பிரென்ஸ் ஒபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றுவரும் நிலையில், இந்த நிகழ்வால் போட்டி சற்று நேரம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிபர் தேர்தல் 2020: முக்கியத்துவம் வாய்ந்த பொது விவாதத்திற்கு தயாராகும் அமெரிக்கா!