ETV Bharat / international

பாகிஸ்தான் பயணத்தை இனிதே முடித்த இங்கிலாந்து இளவரசர் - இளவரசி கேத் மிடில்டன்

வாஷிங்டன்: இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கேத் மிடில்டன் ஆகியோர் தங்களது ஐந்து நாள் பாகிஸ்தான் பயணத்தை இனிதே முடித்தனர்.

London Royal Family
author img

By

Published : Oct 21, 2019, 10:29 PM IST

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியமும், அவரின் மனைவி கேத் மிடில்டனும் பாகிஸ்தான் நாட்டுக்கு ஐந்து நாட்கள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டனர்.
பாகிஸ்தானில் உள்ள புராதன இடங்களை அவர்கள் சுற்றிப் பார்த்தனர். மேலும் ஹோட்டல் ஒன்றில் நடந்த விருந்தில் ஆட்டோவில் வந்து கலந்து கொண்டனர்.

இதுதொடர்பான காணொலி வெளியாகி, உலக மக்கள் பலராலும் ரசிக்கப்பட்டது. இந்த நிலையில் வில்லியம், கேத் தம்பதி தனது ஐந்து நாள் பயணத்தை இன்று முடித்துக் கொண்டனர்.
இதையடுத்து கேத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி பாகிஸ்தான் என்று பூரிப்புடன் காணொலி ஒன்றை பகிர்ந்துள்ளார்.

நன்றி பாகிஸ்தான் என்ற வார்த்தையை ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளில் கேத் எழுதி இருந்தார். மேலும் பாகிஸ்தானில் தாங்கள் விரும்பிச் சென்ற இடங்கள், அரண்மனைகள், புராதனச் சின்னங்கள் ஆகியவை குறித்த தகவல்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: 23 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தானுக்குச் சென்ற இங்கிலாந்து அரச குடும்பத்தினர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.