விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது தொடர்பான விசாரணையை நவம்பர் மாதம் வரை ஒத்திவைத்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அசாஞ்சே தரப்பு வழக்கறிஞர், ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது மருத்துவ ரீதியாக ஆபத்தானது என வாதிட்டார்.
அசாஞ்சேவை சுவீடனிடமோ அமெரிக்காவிடமோ ஒப்படைப்பது குறித்து தீர்மானிக்க மே 18ஆம் தேதி விசாரணைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது குறித்து விசாரணைகள் நவம்பர் 2ஆம் தேதி தொடங்கும் என்று லண்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அசாஞ்சே மீது பாலியல் குற்றச்சாட்டு மற்றும் அமெரிக்க ரகசியங்களைத் திருடியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன. ஈக்குவடார் தூதரகத்தில் இருந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் வெளியேற்றப்பட்டவுடன் கைது செய்யப்பட்டார். தற்போதுவரை அவர் காவலில் உள்ளார். அவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால் 175 வருடம் சிறை தண்டனை அனுபவிப்பார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'கரோனாவால் 60,000 அமெரிக்கர்களே உயிரிழப்பர், அதனால் எனக்கே வாக்களியுங்கள்!' - ட்ரம்பின் வாக்கு வேட்டை!