ஐரோப்பா ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு பிரெக்ஸிட் முடிவின்படி, வரும் அக்டோபர் 31ஆம் தேதியன்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் பிரெக்ஸிட் வெளியேற்றத்தின் ஒப்பந்தம் குறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அதனைத் தீர்க்க வேண்டும் என்பதற்காக மேலும் மூன்று மாத காலம்வரை பிரெக்ஸிட் அவகாசத்தை நீட்டிக்கக்கோரி ஐரோப்பா ஒன்றியத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது கோரிக்கையை முன்வைத்தார்.
இதைத் தொடர்ந்து குறுகிய மாத காலம் அவகாசமான ஜனவரி 31ஆம் தேதிவரை நீட்டித்து வழங்கலாம் என்று ஐரோப்பா ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளான ஜெர்மனி, அயர்லாந்து முன்வந்து தங்கள் கருத்தைத் தெரிவித்துள்ளன.
இந்த நெருக்கடியை சமாளிக்க வரும் டிசம்பர் 12ஆம் தேதி அந்நாட்டில் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு போரிஸ் ஜான்சன் முடிவுசெய்து, எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெர்மி கார்பினிடம் உதவி கேட்டுக் கடிதம் எழுதியுள்ளார்.
650 உறுப்பினர்களைக் கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தேர்தலை நடத்துவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது இரண்டு முறையும் போரிஸிக்கு எதிராகவே அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:
வெள்ளை மாளிகையில் தீபம் ஏற்றிவைத்து தீபாவளி கொண்டாடிய ட்ரம்ப்!
வயிற்றில் பீர் சுரக்கும் வினோத மனிதன்... குழம்பிய மருத்துவர்கள்!