உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உலகின் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை அமலப்படுத்தியும், பிற நாடுகளுடனான எல்லைப் பகுதியை மூடியும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில், ஜப்பானில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஏற்கனவே 70க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள், ஜப்பானில் நுழைவதற்கு தடை விதித்ததோடு, தடை செய்யப்பட்ட நாடுகளுக்கு, கடந்த இரண்டு வாரங்களில் பயணம் மேற்கொணடவர்களையும் அந்நாட்டில் நுழைய தடை விதித்தும் அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே உத்தரவிட்டுள்ளார்.
இந்த நுழைவுத் தடை , விசா கட்டுப்பாடுகள் ஏப்ரல் 30ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், இது மே இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில், மே ஆறாம் தேதி அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவ நிபுணர்களும், உயர் அலுவலர்களும் ஆலோசித்து வருகின்றனர்.
ஜப்பானில் இதுவரை 13 ஆயிரத்து 385 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், 364 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் பார்க்க: விரைவில் இந்தியச் சந்தைகளுக்கு வருகிறது மோட்டோரோலா எட்ஜ் ரகங்கள்!