உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், உக்ரைன் அதிபர் விளோடிமோர் செலென்ஸ்கி அந்நாட்டு மக்களுக்கு காணொலி வாயிலாக உரையாற்றினார். அவர் பேசுகையில், " நான் ஐரோப்பாவின் 27 நாட்டு தலைவர்களிடம் தொடர்பு கொண்டு பேசினேன். எங்களுக்கு ஆதரவாக துணை நிற்பீர்களா எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் சரி என்று பதில் கூறினாலும் கூட்டணி அமைத்து எதிர்கொள்ள தயாராகவில்லை.
நேட்டோ படையில் உக்ரைனை சேர்ப்பீர்களா என நேடியாக கேட்டேன். எல்லோரும் அச்சப்பட்டுக்கொண்டு பதிலளிக்க தயாராகயில்லை. நாங்கள் தனித்துவிடப்பட்டிருக்கோம். எங்களுடன் சேர்ந்து போர் புரிய யாரும் தாயாராக இல்லை.
நாங்கள் ரஷ்யாவைக் கண்டு அஞ்சவில்லை. நாங்கள் ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்த அஞ்சவில்லை. மாறாக அனைத்து விவகாரம் பற்றியும் ரஷ்யாவிடம் பேச தயாராக இருக்கிறோம். ஆனால் அதற்கான பாதுகாப்புக்கான உறுதிப்பாட்டைதான் நேட்டோ படைகளிடம் கேட்கிறோம். ஆனால் உலகின் மிக பலம் வாய்ந்த நாடு தூரத்திலிருந்து வேடிக்கைப் பார்க்கிறது. ரஷ்ய நாட்டின் மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடை மூலம் இந்த தாக்குதலை நிறுத்த முடியாது எனக் கூறினார்.
ரஷ்யா தனது அண்டை நாடான உக்ரைன் மீது இரு நாள்களுக்கு முன்பு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளத் தொடங்கி போரை பிரகடணப்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான படைவீரர்கள், பீரங்கி டேங்குகள், போர் விமானங்கள் மூலம் உக்ரைனை ஆக்கிரமித்துள்ள ரஷ்யா உக்ரைன் தலைநகர் கீவ்வை நெருங்கியுள்ளது.
இந்த தாக்குதலில் பொதுமக்கள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 130க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் தொடர்பான வீடியோ...