ETV Bharat / international

கரோனா: இத்தாலியில் 25 ஆயிரத்தை கடந்த உயிரிப்பு - இத்தாலி கரோனா வைரஸ் பாதிப்பு

ரோம்: இத்தாலியில் நேற்று ஒரு நாளில் கோவிட்-19 பெருந்தொற்றால் 437 உயிரிழப்புகள் நிகழந்ததால், இறப்புகளின் எண்ணிக்கை 25,085ஆக அதிகரித்துள்ளது.

Italy's coronavirus deaths exceed 25,000

author img

By

Published : Apr 23, 2020, 1:30 PM IST

சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கோவிட்-19 தொற்று தற்போது அந்நாட்டில் குறைந்திருந்தாலும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவிவருகின்றன. உலகளவில் இத்தொற்றால் 1,83,441 பேர் உயிரிழந்துள்ளனர்.குறிப்பாக, அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயினில்தான் இத்தொற்றால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இத்தாலியில் கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்துவந்த உயிரிழப்புகள் சமீப நாள்களாக குறையத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், நேற்று ஒருநாளில் இத்தொற்றால் 437 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 85ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டில் முதல் உயிரிழப்புச் சம்பவம் மிலன் நகரில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி நிகழ்ந்தது கவனத்துகுரியது.

இதுவரை இத்தாலியில் இத்தொற்றால் 1,87,327 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒருநாளில் கோவிட்-19 தொற்றிலிருந்து 2,943 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 54,543ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே, கடந்த 24 மணிநேரத்தில் கோவிட்-19 தொற்றால் இரண்டு மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம், இத்தொற்றால் சிகிச்சை பலனின்றி இதுவரை 144 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர். இத்தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் இத்தாலியில் கடந்த மார்ச் மாதத்தில் அமலப்படுத்திய ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதியுடன் முடிவடைகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அமெரிக்காவில் இரண்டு பூனைகளுக்கு கரோனா உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.