கரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் குறைந்துவருகிறது. ஆனால் இத்தாலி, தென் கொரியா, ஈரான் போன்ற நாடுகளில் அதன் தாக்கம் அதிகரித்துவருகிறது. ஐரோப்பா இத்தாலியில் இதுவரை 53 ஆயிரத்து 578 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 60 விழுக்காட்டிற்கும் மேல் லோம்பார்டி மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.
அதனால் அவர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மார்ச் 21ஆம் தேதி மட்டும் கரோனா வைரஸ் காரணமாக 793 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்நாட்டு மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
உலகம் முழுவதும் கரோனாவால் இரண்டு லட்சத்து 87 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதித்துள்ளனர். 11 ஆயிரத்து 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வயதானவர்கள், உடல்நலக் குறைவு உள்ளவர்களிடம் இந்த வைரஸ் எளிதாகப் பரவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடம்!