கொரோனா வைரஸ் பாதிப்பானது தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு கடும் அச்சுறுலாக விளங்கிவருகிறது. பிப்ரவரி மாத தொடக்கம்வரை சீனாவில் மட்டுமே கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திவந்த கொரோனா வைரஸ் கடந்த 15 நாள்களாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் தீவிரமாகப் பரவத்தொடங்கியது.
குறிப்பாக சீனாவுக்கு அடுத்தப்படியாக ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா நோய் பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இத்தாலியில் கொரோனா பாதிப்பால் 463 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒன்பதாயிரத்து 172 பேர் நோய் பாதிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இத்தாலியில் நோய் தடுப்பு அவசரகால நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பொதுப்போக்குவரத்துக்கு முற்றிலுமாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
குடிமக்கள் தங்கள் வசிப்பிடங்களைவிட்டு பயணம் மேற்கொள்ள தற்காலிகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனால் இத்தாலியின் ஒட்டுமொத்த நகரங்களும், முக்கிய தெருவீதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதையும் படிங்க: கட்டுக்கடங்காத கொரோனா; 4,000 உயிர்கள் பலி