ETV Bharat / international

போலி கையில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஊழியர்... காரணம் தெரியுமா? - இத்தாலி போலி கை

இத்தாலியில் ஒருவர் போலி கையில் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Covid jab using fake arm
போலி கையில் தடுப்பூசி
author img

By

Published : Dec 4, 2021, 5:17 PM IST

Updated : Dec 4, 2021, 5:23 PM IST

ரோம்: இத்தாலியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ஊழியர் ஒருவர் கரோனா தடுப்பூசி செலுத்திகொள்ள அருகிலுள்ள முகாமிற்கு நேற்று(டிச.3) சென்றுள்ளார். அவருக்கு தடுப்பூசி செலுத்த முயன்ற செவிலி, அவரது தோல் ரப்பரைப் போன்று வித்தியாசமாகவும் குளிர்ச்சியாகவும் இருப்பதை அறிந்து சந்தேகமடைந்தார்.

உடனே இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அதனடிப்படையில், அவரிடம் விசாரணை நடத்திய காவலர்கள், தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பம் இல்லாததால், சான்றிதழ் பெற சிலிகான் மோல்டால் தனது கைகளை மூடிக் கொண்டு வந்துள்ளதை கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் உலகம் முழுவதும் பல லட்சம் மக்கள் தடுப்பூசி செலுத்திகொள்ள தயக்கம் காட்டிவருகின்றனர். அத்துடன் விருப்பம் இல்லாமல் ஒருவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ள கட்டாயப்படுத்த ஜனநாயகத்திற்கு எதிரானது என்று கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: குஜராத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

Last Updated : Dec 4, 2021, 5:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.