பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் அதிபரான மசூத் கான் ஃபிரான்ஸ் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் குறித்து உரை நிகழ்த்தவிருந்தார். அப்போது, இந்தியாவின் ஒரு அங்கம் ஜம்மு - காஷ்மீர் என அவர் பேசவிருந்தார். ஆனால், இந்திய தூதரகம், ஃபிரான்ஸ் வாழ் இந்தியர்களின் முயற்சியால் அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் இறையாண்மைக்கு அந்த உரை பங்கம் விளைவிக்கும் என ஃபிரான்ஸ் சார்பில் பாகிஸ்தானுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டுவந்ததன் மூலம் ஜம்மு - காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவியது. அப்போதிலிருந்து, காஷ்மீர் பிரச்னையை சர்வதேச பிரச்னையாக மாற்ற பாகிஸ்தான் முயற்சித்துவருகிறது. ஆனால், இந்தியா இதற்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவருகிறது.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை உலக பயங்கரவாதிகளின் பட்டியலில் சேர்க்க இந்தியாவுக்கு ஃபிரான்ஸ் உதவியது குறிப்பிடத்தக்கது.