மாஸ்கோ: ரஷ்ய நாட்டில் உள்ள கம்சாத்கா தீபகற்பத்தில், எட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள குரில் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து ரஷ்ய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "Mi-8 ஹெலிகாப்டர் ஏரியில் விழுந்து மூழ்கியபோது அதில், 13 சுற்றுலா பயணிகள் மூன்று விமானிகள் இருந்தனர். தற்போது மீட்புக் குழுவினர், எட்டு பேரை மீட்டுள்ளனர். அதில், இரண்டு பேர் பலத்த காயமடைந்துள்ளனர். காணாமல் போன, எட்டு பேரை தேடும் பணி நடைபெற்றுவருகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mi-8 ஹெலிகாப்டர்
Mi-8 ரக ஹெலிகாப்டர்களின் உற்பத்தி 1960களில் தொடங்கப்பட்டது. இவ்வகை ஹெலிகாப்டர்கள் ரஷ்யா உள்ளிட்ட சோவியத் நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் 37 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டதாகும். இந்த ஹெலிகாப்டரின் இன்ஜின் செயல்பாடுகள் சீராக உள்ளதாக அதன் பராமரிப்பு இயக்குநர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: ஹெலிகாப்டர் விபத்து: விமானிகளைத் தேடும் பணி 7ஆவது நாளாக நீடிப்பு!