புவி வெப்ப மயமாதல் குறித்தும் பருவநிலை மாற்றம் குறித்தும் தொடர்ந்து பரப்புரை நிகழ்த்திவருபவர் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க். தனியொரு ஆளாக 'Friday for Future' என்ற போராட்டத்தை முன்னெடுத்த இவரை பின்தொடர்ந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பருவநிலையைக் காப்பற்ற களத்தில் குதித்துள்ளனர்.
நோர்டிக் கவுன்சில் நடத்திய ஸ்டாக்ஹோம் விழாவில், இவருக்கு சுற்றுச்சூழல் விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதுடன் சன்மானமாக 52,000 டாலர்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தனக்கு விருது வழங்கிய நோர்டிக் கவுன்சிலுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட அவர், பருவநிலை மாற்றங்களுக்குத் தேவை விருதுகள் இல்லை என்றும் அரசியல் தலைவர்கள் இப்போதுள்ள அறிவியலுக்குச் செவி சாய்த்தால் மட்டுமே பருவநிலை மாற்றத்திலிருந்து தப்பிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உலகத் தலைவர்களைத் தெறிக்கவிடும் கிரேட்டா!