காலநிலை மாற்றம் தொடர்பாக அண்டார்டிகா, கிரீன்லாந்தில் உள்ள பனிப் படலங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து செயற்கைக்கோள் மூலம் ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மேற்குறிப்பிட்ட துருவப் பகுதிகளில், பனிப் படலங்கள் 90-களில் இருந்ததை விட, சுமார் ஆறு மடங்கு வேகமாக உருகி வருவதாக ஆய்வுக் குழு ஒன்று அதிர்ச்சித் தரும் தகவலை வெளியிட்டுள்ளது.
ஐஸ் ஷீட் மாஸ் பேலன்ஸ் இண்டர்-கம்பாரிசன் எக்சர்சைஸ் (Ice Sheet Mass Balance Inter-comparison Exercise or IMBIE) என்ற ஆய்வுக் குழுவைச் சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரூ ஷேபர்ட் கூறுகையில், "1992 - 2017 காலகட்டத்தில் கிரீன்லாந்து, அண்டார்டிகா பகுதிகள் 6.4 ட்ரில்லியன் டன் பனி உருகியுள்ளது.
அப்படிப் பார்த்தால் உலகளவில் கடல் மட்டும் 17.8-ஆக உயர்ந்திருந்திருக்கும். இது நல்ல செய்தி அல்ல.
கடல்மட்ட உயர்வுக்கு மூன்றில் ஒரு பங்கு பனிப் படலங்களே காரணமாய் இருக்கின்றன. 90-களில் வெறும் ஐந்து விழுக்காடு தான் இருந்தது. இதனால் எதிர்காலத்தில் கடல் நீர் உட்புகுதல், மண்ணரிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகளவில் நடக்க வாய்ப்புள்ளது" என்றார்.
IMBIE நடத்திய ஆய்வுகளில், பனிப் படல உருகுதல் காரணமாக இந்த நூற்றாண்டுக்குள், உலகளவில் கடல் மட்டம் மேலும் 17 செ.மீ., உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அது நடக்குமேயானால் 2100-ஆம் ஆண்டுக்குள் உலகளவில் கடற்கரை அருகே வசிக்கும் 400 மில்லியன் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என பேராசிரியர் ஆண்ட்ரூ ஷேபர்ட் எச்சரிக்கிறார்.
இதையும் படிங்க : சிந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ்...