பொதுமக்களின் வாழ்க்கையின் அங்கமாகவே ஆகிவிட்டது தேநீர் அருந்துவது. பெரும்பாலானோர் தேநீர் அருந்தினால் மன பாரம் குறைகிறது எனவும் கூறுகிறார்கள். இந்நிலையில், இங்கிலாந்து நாட்டிலுள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு எதிரே இருக்கும் உணவகத்தில் ஒரு குவளை தேநீர் 200 டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 13 ஆயிரத்து 800 ரூபாய்) விற்பனை செய்யப்படுகிறது.
அந்த காஸ்ட்லியான தேநீரை வாடிக்கையாளர்களுக்கு அபூர்வமான வெள்ளை நிறக் குவளையில் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். மேலும் நாம் பயன்படுத்தும் சாதாரண தேயிலைத் தூளை இந்தத் தேநீர்க்குப் பயன்படுத்துவது இல்லை. இலங்கையிலிருந்து கொண்டுவரும் பிரத்யேகமான 'கோல்டன் டிப்ஸ்' எனப்படும் தேயிலையைக் கொண்டு தேநீரைத் தயாரிக்கின்றனர்.
இந்தத் தேநீர் அருந்துவதற்கு உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இந்த ஒரு குவளைத் தேநீர் விலையோ, சராசரி இந்தியக் குடிமகனின் மாதாந்திர சம்பளம் எனப் பலர் ஆச்சரியத்துடன் வாயைப் பிளக்கின்றனர்.