ஜரோப்பிய ஒன்றிய நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக மார்ச் 17ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில், ஜரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனி வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள தடைவிதித்திருந்தது.
இந்நிலையில், ஜரோப்பிய ஒன்றியங்களைத் தவிர்த்து 160க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கான தடையை, ஆகஸ்ட் மாதம் இறுதிவரை நீட்டித்து ஜெர்மனி அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, ஜரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 27 நாடுகளுக்கு மட்டும் பயணம் மேற்கொள்ளும் வகையில் தளர்வுகளை அந்நாட்டு அரசு அறிவித்தது. இதனையடுத்து ஜெர்மனியிலிருந்து சுவிட்சர்லாந்து, லிச்சென்ஸ்டீன், நார்வே, ஜஸ்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:ஆப்பிரிக்க நாடுகளில் 2 லட்சத்தைத் தொட்ட கரோனா பாதிப்பு!