பெர்லின்:தென் கிழக்கு ஜெர்மனியில் அமைந்துள்ள பவேரியாவில் ஜனவரி 10ஆம் தேதி ஊரடங்கு முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதை ஜனவரி இறுதிவரை நீட்டித்து பவேரியா ஆளுநர் மார்கஸ் சோடர் உத்தரவிட்டுள்ளார்.
நவம்பர் மாதம் கரோனா ஊரடங்கில் தளர்வு அறிவித்ததால், கரோனா பாதிப்பு அதிகமானதைத் தொடர்ந்து டிசம்பர் 16 முதல் ஜெர்மனியில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஜனவரி 10ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜெர்மனியின் 16 ஆளுநர்களும் தற்போது ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்துள்ளனர். பவேரியா ஆளுநர் முதலாவதாக ஊரடங்கு நீட்டிக்கும் என அறிவித்துள்ளார். கடந்த 7 நாட்களாக ஜெர்மனியில் கரோனா பாதிப்பு அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.