இரண்டாம் உலகப்போரின் இறுதிக்காலக் கட்டமான 1944, 1945 ஆகிய ஆண்டுகளில் ஜெர்மனியின் டான்ஸாக் சிறையின் கார்டாக பணிபுரிந்து வந்தவர் ப்ரூனோ டி. நாஜி. இவர் கார்டனாக இருந்த காலக்கட்டத்தில், சிறையில் இருந்த பலரும் பல்வேறு வழிகளில் கொலை செய்யப்பட்டனர்.
மொத்தமாக இவர் 5 ஆயிரத்து 232 பேரின் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்துள்ளார். அந்தக் கொலைகளுக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஜெர்மனியின் ஹம்ஸ்பெர்க் மாநில நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
அந்த வழக்கில் நேற்று முன்தினம் (ஜூலை 23) தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது நீதிபதி ஆனி மெயர் கோயரிங், ''அந்தக் கொடூரமான சம்பவங்களை செய்ய எப்படி பழகினீர்கள்? என கேள்வி எழுப்பினார். ஏனென்றால் அந்தக் காலக்கட்டத்தில் ப்ரூனோ டி-யின் வயது 17 என்பது குறிப்பிடத்தக்கது.
அதையடுத்து, ''ப்ரூனோ டி மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது'' என நீதிபதி தீர்ப்பை வாசித்தார்.
இதனைத் தொடர்ந்து ப்ரூனோ டி பேசுகையில், ''என்னால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இத்தனை ஆண்டுகளான அனுபவித்து வந்த இன்னல்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஹிட்லர் பிறந்த வீடு காவல் நிலையமாக மாற்றம்!