ஜி7 நாடுகளின் 45ஆவது உச்சிமாநாடு பிரான்ஸில் அமைந்துள்ள கடற்கரை நகரமான பியாரிட்ஸில் ஆகஸ்ட் 24, 26ஆம் தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்துகொண்டார்.
இந்நிலையில், இம்மாநாட்டில் ஒருபகுதியாக 'பல்லுயிர் பெருக்கம், பெருங்கடல், பருவநிலை' குறித்து பேசிய மோடி, நிலையான எதிர்காலத்தை நோக்கி சூரியசக்தியை மின்னாக்குதல், பிளாஸ்டிக்கை ஒழித்தல், நீரைச் சேமித்தல், தாவரம், விலங்குகளைக் காத்தல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை இந்தியா மேற்கொண்டுவருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு நாட்டுத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
பருவநிலை மாற்றம், அழிந்துவரும் பல்லுயிர் பெருக்கம் ஆகிய பிரச்னைகளை திறம்பட எதிர்கொள்வதில் இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து செயல்பட்டுவருகின்றன.
கடந்த 2015ஆம் ஆண்டு, பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலாண்டுடன் சேர்ந்து பிரதமர் மோடி, சர்வதேச சூரியசக்தி கூட்டணியைத் (International Solar Alliance) தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.