ETV Bharat / international

அதிகரிக்கும் கோவிட்-19: பிரான்சில் மீண்டும் லாக்டவுன்? - பிரான்ஸ் கோவிட் லாக்டவுன்

பிரான்ஸ் நாட்டில் கோவிட்-19 பாதிப்பின் மூன்றாம் அலை தீவிரமடையத் தொடங்கியுள்ளது.

France
பிரான்ஸ்
author img

By

Published : Mar 22, 2021, 12:21 PM IST

கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகளில் உலக நாடுகளில் மும்முரமாக ஈடுபட்டும் நிலையிலும், பல இடங்களில் அடுத்தக்கட்ட பாதிப்பு அலை வீச தொடங்கியுள்ளது. குறிப்பாக பல ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், அங்கு மீண்டும் பல கட்ட லாக்டவுன்கள் போடப்பட்டுவருகின்றன.

பிரான்சின் தலைநகரான பாரீஸ் உள்ளிட்ட பல இடங்களில் ஒரு மாத காலத்திற்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறக்கப்பட்ட நிலையில், கல்வி நிலையங்கள் திறந்துள்ளன.

அங்கு மூன்றாவது அலையின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்துவருவதால், அடுத்தக்கட்ட கட்டுப்பாடுகள் குறித்து அரசு சுகாதாரத் துறை அலுவலர்களிடம் ஆலோசித்துவருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 35,327 பாதிப்புகள் பிரான்சில் ஏற்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42 லட்சத்து 82 ஆயிரத்து 603ஆக உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 92 ஆயிரத்து 305ஆக உயர்ந்துள்ளது.

ஒருவேளை அங்கு பாதிப்பு தொடர்ந்து உயரும்பட்சத்தில் மூன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

இதையும் படிங்க: லாக்டவுனுக்கு எதிராகப் போராட்டம்: லண்டனில் 33 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.