இகுவாலடா, ஓடெனா, சாண்டா மார்கரிடா டி மோன்ட்புய், விலியனோவா டெல் கேமி ஆகிய பகுதிகளில் வசிக்கும் 66,000 குடியிருப்புவாசிகள் "தங்கள் நகர்ப்புறத்தைை விட்டு வெளியேற முடியாது" என்றாலும் அவர்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியும் என்று கட்டலோனியாவின் ஆளுநரின் அறிவுறுத்தல்களை மேற்கோளிட்டு ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், பிராந்திய தலைநகரான பார்சிலோனாவிலிருந்து 70 கிலோமீட்டர் (40 மைல்) தொலைவில் உள்ள 40,000 குடியிருப்புவாசிகள் வசிக்கும் இகுவாலடா மீது அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாக கட்டலோனியாவின் சுகாதார அமைச்சர் ஆல்பா வெர்ஜஸ் தெரிவித்தார்.
மேலும், நகரில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை கடந்த புதன்கிழமை 38ஆக இருந்த நிலையில் தற்போது 58ஆக அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.