கிரேக்க நாடு சாமோஸ் தீவுகளில் நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் அகதிகள் முகாமில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து அகதிகள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "அகதிகள் முகாமில் 15 கூடாரங்கள் எரிந்து சாம்பலாகின. அதில் வசித்துவந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். உயிரிழப்பு குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிரேக்க நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் தீ விபத்து ஏற்படுவது இது முதல்முறை அல்ல. கடந்த மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், லெஸ்போஸ் தீவுகளில் உள்ள மோரியா அகதிகள் முகாமில் பலமுறை தீ விபத்து ஏற்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் கிரேக்க நாட்டில் உள்ள பல தீவுகளை பாதிப்புக்குள்ளாகியது. நிலநடுக்கம் காரணமாக சாமோஸ் தீவுகளில் இருவர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.