பிரான்ஸ் நாட்டின், பாரிஸைச் சேர்ந்த ரேமண்ட் ஹெக்கிங் என்பவர், கடந்த 1953ஆம் ஆண்டில் ஒரு கடையில் ’மோனாலிசா’ ஓவியத்தை இவர் வாங்கியுள்ளார். அது பார்ப்பதற்கு லியோனார்டோ டாவின்சி வரைந்த மோனலிசா ஓவியம் போல் இருந்ததால், உண்மையானது என்றே நினைத்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், தற்போது அந்த ஓவியத்தை ஆன்லைனில் அவர் ஏலம் விட்டார். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், இந்த ஓவியம் 3.4 அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் 25 கோடி ரூபாய்) ஏலம் எடுக்கப்பட்டுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
லியோனார்டோ டாவின்சி தனது படைப்புகளை ஒரு மரப் பலகையில் உருவாக்கிய நிலையில், இப்படம் போலி கேன்வாஸில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உலகின் 3ஆவது பெரிய வைரம்: அந்த நாட்டிற்கு மீண்டும் அதிர்ஷ்டம்!