ETV Bharat / international

பிரெக்ஸிட்டுக்கு பிறகான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்!

author img

By

Published : Dec 30, 2020, 9:23 PM IST

பிரஸ்ஸல்ஸ்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய நிலையில், பிரெக்ஸிட்டுக்கு பிறகான ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்
ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள்

பிப்ரவரி 1ஆம் தேதி, ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இதனை (Britain + Exi = Brexit) பிரெக்ஸிட் என்று அழைக்கிறார்கள். இந்நிலையில், எல்லை தாண்டி வர்த்தகம் மேற்கொள்ளும் வகையில் பிரெக்ஸிட்டுக்கு பிறகான ஒப்பந்தத்தை பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இறுதி செய்தன.

அந்த ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, பிரிட்டன் விமான படை விமானம் மூலம் அது லண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஆகியோர் 1,246 பக்கம் கொண்ட வர்த்தக மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இது குறித்து உர்சுலா வான் டெர் லேயன் கூறுகையில், "இது நீண்ட கால பயணமாகும். பிரெக்ஸிட் பின்னுக்கு தள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது. நமது எதிர்காலம் ஐரோப்பிய கண்டத்தில் உள்ளது" என்றார். பிரெக்ஸிட்டுக்கு பிறகான இக்கட்டான காலத்தில் தீவிர வர்த்தக பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஐரோப்பிய ஒற்றை சந்தையிலிருந்து பிரிட்டன் நாளை (டிசம்பர் 31) விலகவுள்ளது.

லண்டனுக்கு அனுப்பப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கையெழுத்திடவுள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒப்பந்தம் குறித்த விவாதம் நடைபெறும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.