இது குறித்து பேசிய ஐரோப்பிய ஆணைய துணைத் தலைவர் வீரா ஜொரோவா, "கோவிட்-19 குறித்து சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் உலக அளவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பொய்ப் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன.
உதாரணத்துக்கு சோவியத் யூனியனிலிருந்து பிரிந்துசென்ற நாடுகளில் அமெரிக்கா உயிரியல் ஆய்வுக்கூடங்களை நடத்திவருவதாக ரஷ்ய ஊடகங்களும், சீன அலுவலர்களும் கூறிவருகின்றனர்.
நம்மிடம் ஆதாரம் இருக்கும்போது சதி வேளையில் ஈடுபடுவோரை நாம் ஏன் அம்பலப்படுத்தக் கூடாது. இதுபோன்ற விஷயங்களுக்கு எதிர்ப்பைத் தெரிவிப்பதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் புவி அரசியல் வலிமையை வெளிப்படுத்த முடியும்" என்றார்.
ஐரோப்பியாவில் கோவிட்-19 பெருந்தொற்று தாக்கம் மிகத் தீவிரமாக இருந்த ஏப்ரல் மாதத்தில், சுகாதாரப் பணியாளர்கள் தங்கள் வேலையை ராஜிநாமா செய்துவிட்டதாகவும், இதனால் பலர் வீடுகளிலேயே இறந்துவருவதாகவும் சீன தூதரக இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டது. இது ஃபிரான்ஸ் அரசியல்வாதிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
"உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோமுக்கு எதிராக ஃபிரான்ஸ் அரசியல்வாதிகள் 80 பேர் நிறவெறி கருத்துகளைக் கூறினர்" எனச் சீன தூதர் ஒருவர் கூறியதும் சர்ச்சையைக் கிளப்பியது.
பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் சீனாவின் ஆதிக்கத்தைச் சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுவருகின்றன.
2019ஆம் ஆண்டு ஐரோப்பிய ஆணையம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் சீனாவை 'எதிரி நாடு' எனக் குறிப்பிட்டிருந்தது. அத்துமீறல், அராஜகப்போக்கை கையாண்டுவரும் சீனாவை ஒழுங்குப்படுத்தும் திருப்புமுனையாகவே அந்த அறிக்கையை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் கருதின.
இதையும் படிங்க : 'எங்க சேவையை நீங்க பயன்படுத்தக் கூடாது' -காவல் துறைக்கு தடைபோட்ட அமேசான்!