ETV Bharat / international

கரோனாவைக் கண்டறியும் கம்பியூட்டர்... ஆராய்ச்சியில் கிரான்ஃபீல்ட் பல்கலைக்கழகம் - X-ray that indicate pneumonia,

லண்டன்: கரோனா தீநுண்மி செயற்கை நுண்ணறிவு உதவியுடன், எக்ஸ்ரே வழியாகக் கண்டறியும் கணினி மாதிரிகளை உருவாக்கும் முயற்சியில் கிரான்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் (Cranfield University) மாணவர்கள் களமிறங்கியுள்ளனர்.

கரோனா
கரோனா
author img

By

Published : May 31, 2020, 4:37 PM IST

கரோனா தீநுண்மி பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய பல சோதனை முறைகள் உள்ளன. ஆனால், இச்சோதனை முடிவுகள் வெளிவர காலதாமதம் ஆவதால், விரைவாகக் கண்டறியும் கருவிகளை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர்.

அந்த வகையில், லண்டனில் உள்ள கிரான்ஃபீல்ட் (Cranfield University) பல்கலைக்கழகத்தில் பயிலும் 5 முதல் 6 மாணவர்கள் அடங்கிய குழுவினர், கரோனா வைரஸை செயற்கை நுண்ணறிவு உதவியுடன் எக்ஸ்ரே வழியாகக் கண்டறியும், கணினி மாதிரிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நாம் ஒருவரைப் பார்க்கும் போது கரோனா பாதிப்பு உள்ளதா என்பது தெரியாது. ஆனால், இந்தக் கணினி மூலம் பார்க்கும் போது கரோனா பாதிப்பு தெளிவாகத் தெரியும் எனக் கூறப்படுகிறது.

இந்த கணினி மாதிரி செயல்பாடானது, கரோனாவின் பொதுவான அறிகுறியான நிமோனியா பாதிப்பு உள்ளதா என்பதை உறுதிசெய்யும். அவ்வாறு செய்தபின் இரண்டாவதாக இந்தக் கணினி மாதிரியானது நிமோனியா பாதிப்பு, கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யும்.

இந்தக் கணினி மாதிரிகள் அனைத்துத் தரப்பிலான டேட்டாஸ்களை ஆராய்ந்து உருவாக்கப்பட்டுள்ளதால் மிகவும் துல்லியமாக, கரோனா உள்ளதா என்பதை கண்டறிய உதவும் என மாணவர்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.

இத்திட்டத்திற்குத் தலைமை தாங்கும் கிரான்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மருத்துவர் ஜீஷன் ராணா கூறுகையில், " மாணவர்கள் தொடங்கிய முயற்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இதுதொடர்பாக அரசின் மருத்துவ அலுவலர்களிடமும், தொழில்துறையிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

மேம்பட்ட AI வழிமுறைகள் (advanced AI algorithms), சி.டி ஸ்கேன்களைப் பயன்படுத்துவதின் மூலமும் சோதனை முடிவுகளின் விவரங்களை மிகத் துல்லியமாகக் கண்டறிய முடியும்" என்றார்.

இந்தக் கணினி மாதிரிகளை மேம்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கினால், எளிதில் சோதனை முடிவைக் கண்டறிய முடியும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 60 லட்சத்தை தாண்டிய கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.