ETV Bharat / international

கரோனாவால் ஹெச்ஐவி நோயாளிகளின் சிகிச்சைப் பாதிப்பு: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை! - new child HIV infections rise due to Corona

கரோனா வைரஸ் சிகிச்சையின்போது, ஹெச்ஐவி-யால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்கும், அவர்களுக்கான சேவையை உறுதிப்படுத்தவும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

covid-19-related-service-disruptions-could-cause-thousands-of-extra-deaths-from-hiv-who

author img

By

Published : May 13, 2020, 7:31 PM IST

உலகம் முழுவதும் பரவிவரும் கரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவ எமர்ஜென்சி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இதனால் ஹெச்ஐவி நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆண்டிரெட்ரோ சிகிச்சை அளிக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதன்காரணமாக, எய்ட்ஸ் தொடர்பான நோய்களால் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக்கூடும் என, உலக சுகாதார நிறுவனம், யுஎன்-எய்ட்ஸ் ஆகியவை எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் தெட்ரோஸ் அதனோம் பேசுகையில், '' எய்ட்ஸ் தொடர்பான நோய்களால் ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்த வரலாறுகள் உள்ளன. இந்த அறிவிப்பை உலகம் முழுவதும் உள்ள சுகாதார மையங்கள் ஒரு எச்சரிக்கை மணியாக பார்க்க வேண்டும். சில நாடுகளில், ஹெச்ஐவி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த 2018ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி ஆப்பிரிக்கா மற்றும் அதன் சுற்று வட்டார நாடுகளில் 25.7 மில்லியம் மக்கள் ஹெச்ஐவி-யால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16.4 மில்லியன் மக்கள் ஆண்டிரெட்ரோ சிகிச்சைப் பெற்றுவந்துள்ளனர். தற்போது, நிலவி வரும் கரோனா வைரஸ் சூழலால், ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் உலகம் முழுவதும் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. அதேபோல் ஹெச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தை பேறுவின்போது, குழந்தைக்கு ஹெச்ஐவி பரவாமல் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறைந்துள்ளன.

குழந்தைப்பேறுவின் போது தாயிடமிருந்து ஹெச்ஐவி பரவாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை, ஆப்பிரிக்க நாடுகளில் அதிகரித்து வந்த நிலையில் கரோனா வைரஸ் காலத்தில் இந்த நடவடிக்கைகள் குறைந்துள்ளன. இதனால் மோசாம்பிக் பகுதியில், 37 சதவிகிதமும், மலாவி பகுதியில் 78 சதவிகிதமும், ஜிம்பாப்வேவில் 78 சதவிகிதமும், உகாண்டாவில் 104 சதவிகிதமும் அதிகரித்துள்ளன. இதனால், கரோனா வைரஸ் சிகிச்சையின்போது ஹெச்ஐவி-யால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்கும், அவர்களுக்கான சேவையை உறுதிப்படுத்த வேண்டும்'' என்றார்.

இதையும் படிங்க: கரோனா: அவலநிலையில் ஜிம்பாப்வே எய்ட்ஸ் நோயாளிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.