ETV Bharat / international

கரோனா வைரஸால் மக்களுக்கு நடமாட தடை: டைனோசராக மாறிய நபரின் வைரல் வீடியோ - corona virus latest news

மாட்ரிட்: ஸ்பெயினில் மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளதால் டைனோசர் வேடத்தில் சுற்றிய நபரின் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கரோனா
கரோனா
author img

By

Published : Mar 19, 2020, 12:01 AM IST

உலக நாடுகளில் கரோனா வைரஸ் காரணமாக பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால், பல்வேறு நாடுகள் அரசின் முழுக் கட்டுபாட்டுக்குள் தற்போது வந்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஸ்பெயின் நாட்டில் முர்சியா மாகாணத்தில் அரசின் தடையை மீறிய ஒருவரின் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், மக்கள் வெளியே நடமாட அரசு தடை விதித்துள்ளதால், டைனோசர் வேடம் அணிந்துகொண்டு சாலையில் அந்நபர் உலா வந்துள்ளார். இதைப் பார்த்த முர்சியா காவல் துறையினர், உடனடியாக அவரைத் தடுத்து நிறுத்தி மீண்டும் வீட்டிற்கே அனுப்பி வைத்தனர்.

  • En estado de alarma se permite el paseo de mascotas acompañadas de una persona, siempre con paseos cortos para hacer sus necesidades.

    El que tengas complejo de Tyrannosaurus rex no está contemplado.#quédateencasa pic.twitter.com/C8dWkrvAdm

    — Policía Local Murcia (@MurciaPolicia) March 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்தக் காணொலியை முர்சியா காவல் துறையினர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அதில், ”செல்லப் பிராணிகளுக்குத் தான் சிறிய தூரம் நடக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் டைனோசர் நடமாட அனுமதிக்க முடியாது” என நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தனர். ஸ்பெயின் நாட்டில் இதுவரை 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கரோனா வைரஸால் பாதிப்பு அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இத்தாலி நாளிதழில் பத்து பக்கத்திற்கு கோவிட்-19 உயிரிழப்பு செய்தி - தொடரும் சோகம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.