இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது அங்குள்ள ஹைட் பார்க் செர்பென்டைன் ஏரியில் நீச்சல் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இதனிடையே நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் அங்கு நீச்சல் போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் செர்பென்டைன் நீச்சல் கிளப்பைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தற்போது நிலவிவரும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் அந்த ஏரியில் நீந்தி மகிழ்ந்தனர். இப்போட்டியில் கலந்துகொண்டது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இதில் பங்கேற்ற நீச்சல் வீரர் ஒருவர் தெரிவித்தார். மேலும் 130 ஆண்டுகளுக்கு முன் இதே போட்டியில் தனது தாத்தா பதக்கம் வென்றது குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டார்.