சீனாவின் வூஹானில் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கரோனா வைரஸ் தற்போது உலகெங்கிலும் பரவி மானிடத்தை அச்சுறுத்தி வருகிறது.
கரோனா பரவத் தொடங்கி வெறும் நான்கு மாதங்களே முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை உலகம் முழுவதும் 2 லட்சத்து 7 ஆயிரத்து 928 பேர் உயிரிழந்துள்ளனர். 30 லட்சத்து 14 ஆயிரத்து 895 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் அதிகாரபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கைகளை பிரிட்டன் அரசு கோட்டுரு (Graph) ஒன்றை ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிட்டிருந்தது.
இந்த கோட்டுருவில் அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ஸ்வீடன், தென் கொரியா, சீனா ஆகிய நாடுகளில் உயிரிழப்பு எண்ணிக்கைகள் இடம்பெற்றிருந்தன.
இதையடுத்து, ஏப்ரல் 25ஆம் தேதி பிரிட்டன் அரசு வெளியிட்டிருந்த கோட்டுருவில் சீனாவின் அதிகாரபூர்வ உயிரிழப்பு எண்ணிக்கையை பிரிட்டன் நீக்கயுள்ளது.
கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சீனா மூடி மறைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டி வந்த நிலையில், பிரிட்டன் வெளியிட்ட கோட்டுருவிலிருந்து சீனா நீக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கரோனாவால் இதுவரை நான்காயிரத்து 632 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன. ஐரோப்பிய நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்த எண்ணிக்கை மிகமிகக் குறைவு.
இதையும் படிங்க : பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்- மோடி