ETV Bharat / international

Bulgaria Bus Crash: பல்கேரியா பேருந்து விபத்தில் 46 பேர் மரணம் - பல்கேரிய பிரதமர் ஸ்டெபென் யானேவ்

ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட கோர விபத்தில்(Bulgaria Bus Crash) 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

Bulgaria
Bulgaria
author img

By

Published : Nov 23, 2021, 5:03 PM IST

பல்கேரியாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் குழந்தைகள் உள்பட 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 12 குழந்தைகளும் அடக்கம். படுகாயமடைந்த ஏழு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தில் பயணம் செய்தவர்கள் பெரும்பாலானோர் சுற்றுலாவாசிகள். துருக்கி நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர்கள் அங்கிருந்து திரும்பிவந்த வேளையில் இந்த கோர விபத்து(Bus crash in Bulgaria) நடைபெற்றுள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து உரிய விவரம் தெரியவில்லை என பல்கேரிய உள்துறை அமைச்சர் போய்கோ ராஷ்கோவ் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து மிகப் பெரும் துயரம் எனத் தெரிவித்துள்ள அந்நாட்டின் இடைக்காலப் பிரதமர் ஸ்டெபென் யானேவ், இதுபோன்ற துயர சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாத வண்ணம் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அதிக சாலை விபத்துகள் ஏற்படும் நாடுகள் பட்டியில் பல்கேரியா இரண்டாம் இடத்தில் உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: TikTok Ban : பாகிஸ்தானில் டிக்டாக் மீதான தடை நிபந்தனைகளுடன் நீக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.