ETV Bharat / international

பிரெக்ஸிட்டால் பிரிட்டனுக்கு ஆபத்தா? - brexit britain general election

நடந்து முடந்த பிரிட்டன் பொதுத்தேர்தல், நீண்ட காலமாக நிலவிவந்த பிரெக்ஸிட் இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஆனால், இந்த பிரெக்ஸிட் பிரிட்டன் அரசியலில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை நம்மிடையே விரிவாக எடுத்துரைக்கிறார் முன்னாள் இந்தியத் தூதரும், எழுத்தாளுமான விஷ்ணு பிரகாஷ்.

brexit and britain future
brexit and britain future
author img

By

Published : Dec 29, 2019, 8:25 AM IST

Updated : Dec 29, 2019, 10:06 AM IST

2017 பொதுத்தேர்தலை அடுத்து வெறும் முப்பதே மாதங்களில் பிரிட்டன், கடந்த 12ஆம் தேதி மீண்டும் தேர்தலைச் சந்தித்தது. இதில் சன்சர்வேட்டிவ் கட்சி, தொழிலாளர் கட்சி, ஸ்காட்டிஷ் தேசியவாதக் கட்சி, லிபரெல் டெமாக்ரெடஸ் கட்சி என பல்வேறு கட்சிகள் களம்கண்டன. முடிவில் வென்றது யார் தெரியமா ? 'பிரெக்ஸிட்'

பிரெக்ஸிட் ஆலையில் பயணித்த நம் இந்திய மருமகன் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி, மொத்தமுள்ள 650 தொகுதிகளில் 365-களைக் கைப்பற்றி (கடந்த தேர்தலைவிட 46 தொகுதிகள் அதிகம்) மாபெரும் வெற்றிகண்டது. மாறாக, பிரெக்ஸிட் குறித்து தெளிவான நிலைடின்றி பரப்புரை செய்த 70 வயது 'போர்க்குதிரை' ஜெரிமி கார்பின் வழிநடத்திய தொழிலாளர் கட்சியால், வெறும் 203 தொகுதிகளை மட்டுமே தாக்கவைக்க முடிந்தது. 1935ஆம் ஆண்டுக்குப் பிறகு அக்கட்சி அடைந்த மிக மோசமாக தோல்வி இதுவாகும்.

brexit, britain, west minister uk parliament, பிரிட்டன் நாடாளுமன்றம்
பிரிட்டன் நாடாளுமன்றம்

முதல் முறையாக, தேர்தலுக்கு முந்தையை கருத்துக் கணப்புகள் பிரிட்டன் மக்களின் எண்ணத்தை துள்ளியமாகப் பிரதிபளித்தன. பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்த அபார வெற்றி அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த பிரெக்ஸிட்டை விடுவித்துள்ளது. ஜான்சன் சொன்னபடி ஜனவரி 31ஆம் தேதியோடு பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறுவது (பிரெக்ஸிட்) உறுதியாகியுள்ளது.

சரி, ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுக்கான தொடக்கமா பிரெக்ஸிட் ? இதற்கான பதில் போகப் போகத்தான் தெரியும்.

எப்படி இருந்தாலும், பிரிக்ஸிட் ஐரோப்பிய ஒன்றியத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்துயுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. 1957ஆம் ஆண்டு ஐரோப்பிய பொருளாதார கூட்டமைப்பு என்ற பெயரில் வெறும் ஆறு நாடுகளுடன் தொடங்கிய ஐரோப்பிய ஒன்றியம், தற்போது 28 தேசங்களைத் (பெரும்பாலும் கிறிஸ்தவ பெரும்பான்மையவை) தன்னகத்தே கொண்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. பெயரளவில் மதசார்பற்ற இஸ்லாமிய தேசமான துருக்கியை இந்த ஒன்றியத்தில் இணைப்பதற்கான பேச்சும் நாளடைவில் மங்கிமறைந்துவிட்டது.

இதையும் படிங்க : பிரெக்ஸிட்டை இனி யாராலும் தடுக்க முடியாது - பிரிட்டன் பிரதமர் சூளுரை

பிரெக்ஸிட் விளைவுகள் :

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் இறையாண்மையை மீட்டுவிடதாக பிரெக்ஸிட் ஆதரவாளர்கள் துள்ளிக் குடிக்கும் நேரத்தில், பிரெக்ஸிட்டால் பிரிட்டனுக்கு ஏதேனும் நம்மை பயக்குமா என்று கேட்டாமல், இல்லை என்றே தான் சொல்லவேண்டும்.

ஒய்வுபெற்ற மூத்த இந்தியத் தூதர் ஒருவர் கூறுகையில், 'பிரெக்ஸிட் பிரெட்டனை நடுத்தர நாடாக்கும்' என்றார். ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதவாக உள்ள ஸ்காட்லாந்தில், ஸ்காட்லாந்து தேசியவாதக் கட்சி 13 தொகுதிகள் அதிகம் பெற்று 48 தொகுதிகளயும், சன்சர்வேட்டிவ், தொழிலாளர் கட்சிகள் தலா ஆறு தொகுதிகளை இழந்து முறையே 6, 1 தொகுதிகளை வெற்றுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர ஜெரிமி கார்பினுடன், பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரெக்ஸிட், Boris Johnson, Jeremy Corbyn,
எதிர்க்கட்சித் தலைவர் ஜெரிமி கார்பினுடன், பிரதமர் போரிஸ் ஜான்சன் ( இடமிருந்து வளம்)

2014ஆம் ஆண்டு 45 சதவீத ஸ்காட்லாந்து மக்கள் தங்களுக்கென தனிநாடு வேண்டும் என வாக்களித்திருந்தனர். மத்திய பிரிட்டன் அரசு மீதான ஸ்காட்லாந்து மக்களின் அதிருப்தி வீங்கிவிருந்திருப்பது நடந்த முடிந்த தேர்தல் மூலம் பார்ககமுடிகிறது. இதுதவிர, பிரெக்ஸிட் காரணாக வடக்கு அயர்லாந்து-அயர்லாந்து குடியரசு எல்லையில் சுங்கச் சாவடிகள் உருவாக்கும் முயற்சியில் பிரதமர் ஜான்சன் இறங்கினால் வடக்கு அயர்லாந்து மக்கள் எரிச்சலடைவர்.

பிரெக்ஸிட்டால் பிரிட்டனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) அளவு மூன்று சதவீதம் வரை குறையும் என இன்ஸ்ட்டிடியூட் ஃபார் பிஸ்கல் ஸ்டடீஸ் (Institute For Fiscal Studies) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மற்ற ஆய்வுகள் இதைவிட மிகமோசமாக விளைவுகளை கணித்துள்ளன.

இதையும் படிங்க : லண்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய பிரெக்ஸிட்!

அதுமட்டுமல்ல, பிரெக்ஸிட்டைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் பிரிட்டன் நல்லுவை பாதுாப்பது அவ்வளவு சுலபமல்ல. தற்போதைய பொருளாதார சூழலில், மற்ற நாடுகளுடன் பிரிட்டன் கூடியவிரைவில் வர்த்தக ஒப்பந்தம் போட்டுக்கொள்வது எளிதல்ல, அப்படி போட்டுக்கொண்டாலும் அது பிரிட்டனுக்கு சாதகமாக அமையுமா என்று சொல்லமுடியாது.

ஆளும் கன்சர்வேட்டிவ்ஸ் கட்சியிடம் தேவைக்கும் அதிகமான பெரும்பான்மையை உள்ளதால், ஐரோப்பிய ஒன்றியத்துடனான அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் பிரிட்டனின் கை ஓங்கியிருக்கும்.

பிரிக்ஸிடுக்குப் பிறகு, ஐரோப்பிய ஒன்றிய வாசிகள் முன்புபோல பிரிட்டனுக்கு எளிதாக சென்றுவர முடியாது. ஐரோப்பிய வாசிகளாக இருந்தாலும் சரி, இந்தியர்களாக போன்ற மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி நல்ல தகுதிவாய்ந்தவர்களே இனி பிரிட்டனில் குடியுரிமைப் பெறமுடியும்.

கட்சி மாறிய இந்திய வம்சாவளிகள்

வரலாற்றில் முதன்முறையாக, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ( கீழ் சபை) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 பேர் எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் வாழும் 10 லட்சத்தும் அதிகமான இந்திய வம்சாவளிகள் பொதுவாக தொழிலாளர் கட்சிக்கே வாக்களித்தவந்தனர்.

ஆனால் காஷ்மீர் சிறப்புத் தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிராக தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரிமி கார்பின் பேசிவந்தது இந்தியர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக இந்த முறை சன்சர்வேட்டிவ் கட்சிக்கு பெருவாரியான இந்தியர்கள் வாக்களித்தாகக் கூறும் சன்சர்வேட்டி ஃப்ரண்ட் அஃப் இந்தியா அமைப்பின் தலைவர் ரமி ரேஞ்ஞர், "காஷ்மீர் குறித்து தொழிலாளர் கட்சியின் கொள்கை இந்திய வாக்காளர்களை எப்போதும் இல்லாத அளவிற்கு ஒன்றுதிரட்டியுள்ளது" என மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்திய வம்சாவளியினரை சந்திக்கும் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரதமர் போரிஸ் ஜான்சன், PM Boris Johnson, Johnson meets indian dispora
இந்திய வம்சாவளியினரை சந்திக்கும் பிரதமர் போரிஸ் ஜான்சன்

தொழிலாளர் கட்சியின் காஷ்மீர் கொள்கையால் இந்திய வெளியுறவுத் துறை, இந்திய வம்சாவளி சங்கங்கள் அக்கட்சியை வெறுத்தொதுக்கியுள்ளன.

கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி, இந்திய கம்யூனிட்டி ஆர்கனைசேஷன்ஸ் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட 'இந்தியா தின' விழாவுக்கு தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஒரு பிரதிநிதி கூட அழைக்கப்படவில்லை. இதிலிருந்து பிரிட்டன் வாழ் இந்தியா வம்வாசிகள் தங்கள் அரசியல் நோக்குநிலையை மாற்றி அமைத்துக்கொண்டனர் என்பது தெரிளிவாகியுள்ளது.

பிரிட்டனின் முற்றுப்புள்ளியா பிரெகிஸ்ட் ?

முன்னாள் பிரதமர் டேவிட் கேரூனின் இயலாமையினாலே பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாக பிரிட்டன் மக்கள் வாக்கத்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. பிரெக்ஸிட்டால் பிரிட்டன் துண்டுத் துண்டாகச் சிதறிக் கிடக்கிறது. பிரெக்ஸிட் குளறுபடியால், சூரியனே அஸ்தமிக்காத பிரிட்டன் சாம்ராஜியம் இங்கிலாந்தாக சுறுங்குவும் வாப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Intro:Body:

British electorate mandates quick closure of messy divorce (Brexit) with EU 

Conclusion:
Last Updated : Dec 29, 2019, 10:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.