உலகம் முழுவதும் கரோனா வைரஸ் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்த வைரசால் 87 லட்சத்து 86 ஆயிரத்து 592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு லட்சத்து 63 ஆயிரத்து 156 பேர் உயிரிழந்தனர்.
அதிகபட்சமாக அமெரிக்காவில் 22 லட்சத்து 97 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதோடு, ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 407 பேர் உயிரிழந்தனர். இதற்கு அடுத்தபடியாக பிரேசிலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது. அதில் 49 ஆயிரத்து 90 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் மைக் ரியான் பேசுகையில், ''பிரேசிலில் நிலைமை மிகவும் தீவிரமாக இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும் தீவிரமாக இயங்கி வருகின்றனர். தினமும் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்தாலும், சில பகுதிகளில் பாதிப்புகள் குறைந்து வருகின்றன'' என்றார்.