லண்டன்: கரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்துவரும் நிலையில், உலகம் முழுவதும் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வந்தது. இதனிடையே கரோனா உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டப்படஉள்ளது.
அதனால், உலக தலைவர்கள் தங்களது நாட்டு மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கிறிஸ்துமஸ் நாளை கொண்டாடப்பட உள்ளதால், விருப்பமானவர்களுக்கு பரிசுகள் வழங்க இன்னும் சில மணி நேரங்களே உள்ளன.
இருப்பினும் உங்களால் மிகச்சிறந்த பரிசை குடும்பத்திற்கும், நாட்டிற்கும் வழங்க முடியும். தடுப்பூசி செலுத்திக்கொள்வதே அது. முதல் டோஸ், இரண்டாவது, மூன்றாவது, பூஸ்டர் எதுவாக இருந்தாலும் செலுத்திக்கொள்ளுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆடம்பர விவாகரத்து; ஆறாவது மனைவிக்கு ரூ. 5,525 கோடி ஜீவனாம்சம்