ETV Bharat / international

கரோனாவுக்கு சீனாவை குறை சொல்வது தவறு: ஊடகம் மூலம் அமெரிக்காவை சாடும் ரஷ்யா - கோவிட்-19 தொற்று பரவலின் காரணம்

கரோனா பாதிப்புக்கு சீனாவை குறை சொல்வது தவறு என ரஷ்ய ஊடகம் அமெரிக்காவை சாடியுள்ளது.

ரஷ்யா
ரஷ்யா
author img

By

Published : Jun 5, 2021, 4:54 PM IST

கோவிட்-19 ஆரம்பப் பரவல் சீனாவின் வுஹான் பகுதியில் ஏற்பட்ட நிலையில், இந்த வைரஸ் இயற்கையாக விலங்குகள் மூலம பரவியதா அல்லது பரிசோதனை மையத்திலிருந்து பரவியதா என்ற சர்ச்சை மீண்டும் எழத் தொடங்கியுள்ளது.

பரிசோதனை மையத்திலிருந்துதான் வைரஸ் பரவியது என அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தற்போது அழுத்தம் தரத் தொடங்கியுள்ளன. மேலும், வைரஸ் பரிசோதனை மையத்திலிருந்து பரவவில்லை என்பதை நிருபிக்கும் விதமாக அதற்குரிய அனைத்து ஆவணங்களையும் சீனா வெளியிட வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் அழுத்தத்திற்குள்ளான சீனாவுக்கு துணை நிற்கும் விதமாக ரஷ்யா தனது ஊடகங்களை களமிறக்கியுள்ளது. ரஷ்யாவின் ஊடகம் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில், கோவிட்-19 பெருந்தொற்றுக்கு சீனாவை அமெரிக்கா குற்றஞ்சாட்டுவது தவறனாது. இது தொடர்பாக எந்தவொரு அடிப்படை ஆதாரமும் இல்லாத நிலையில், சீனாவுக்கு எதிரான கருத்தை கட்டமைக்கவே இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: லேப்பிலிருந்து வெளியேறியதா கரோனா; சீனாவுக்கு கிடுக்கிப்பிடி போடும் ஆன்டனி பவுச்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.