பாகிஸ்தானின் ஐந்து மாகாணங்களில் பலுசிஸ்தானும் ஒன்று. பல காலமாகவே அங்குள்ள அரசியல் தலைவர்கள் அந்நாட்டிலிருந்து தனியாக பிரிய வேண்டும் என கோரிக்கை வைத்துவருகின்றனர். இதனால் பலுசிஸ்தான் அரசியல் தலைவர்கள் அந்நாட்டு ராணுவத்தால் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
மேலும், ராணுவத்தினர் அவர்களை சிறையில் வைத்து கொடுமைப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இதனை கண்டித்து பலுசிஸ்தான் ஆதரவாளர்கள் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.