ETV Bharat / international

ஐநாவில் கரோனாவை கையாளும் நடவடிக்கைகள் தொடர்பாக மோதிக்கொண்ட 3 முக்கிய நாடுகள்! - சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி

இங்கிலாந்து: ஐநாவில் கரோனா தொற்றை கையாளும் விதம் தொடர்பாக சீனா, ரஷ்யா, அமெரிக்கா நாடுகள் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

m
un
author img

By

Published : Sep 26, 2020, 6:50 AM IST

ஐ.நா சபையின் 75வது ஆண்டு தினத்தினை நினைவுகூரும் வகையில் பொது சபை கூட்டம் ஒன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஐநா பொது செயலாளர் ஆன்டனியோ கட்டெரஸ், ஐநா சபை தலைவர் வோல்கன் போஸ்கிர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் பல உலக தலைவர்கள் காணொலி காட்சி வழியே பங்கேற்று உரையாற்றினர்.

அப்போது பேசிய அதிபர் ட்ரம்ப், உலகையே முடக்கிப்போட்டுள்ள கரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவை பொறுப்பாளியாக்கவேண்டும். சீனா, தனது நாட்டில் உள்நாட்டு விமான சேவைக்கு தடைவிதித்துவிட்டு , வெளிநாட்டு விமான சேவைக்கு அனுமதி வழங்கி கரோனாவை உலகிற்கு பரப்பி லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்திவிட்டது. சீனாவின் இத்தகைய செயல்களுக்கு ஐநா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி பேசுகையில், " ஐ.நா.வை மையமாகக் கொண்ட பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். கரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்கும் சமயத்தில் அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளிலும் உலக முழுவதும் அளித்திட வேண்டும். ரஷ்யா, சிரியா, அமெரிக்கா போன்ற நாடுகள் ஒருதலைப்பட்சமாக பொருளாதாரத் தடைகள் விதிப்பது மட்டுமின்றி சர்வதேச சட்டத்தின் வரம்பை மீறி வருகிறதை எதிர்க்க வேண்டும். கரோனா கையாண்ட விதம் தவறு என்பதை அமெரிக்கா புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.

பின்னர் பேசிய, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், "பொதுவான துரதிர்ஷ்டமும் மாநிலங்களுக்கு இடையேயான வேறுபாடுகளைத் தூண்டவில்லை, மாறாக அவற்றை ஆழப்படுத்தியது. தனிப்பட்ட நாடுகள் தங்களது தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி அவர்களின் குறுகிய நலன்களை முன்னோக்கி நகர்த்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் எனத் தெரிவித்தார்.

அப்போது திடீரென கருத்துகளை பகிர்ந்த அமெரிக்காவின் ஐ.நா தூதர் கெல்லி கிராஃப்ட், " இந்த விவாதங்களின் உள்ளடக்கத்தைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன், வெறுக்கிறேன். சில பிரதிநிதிகள் "அரசியல் நோக்கங்களுக்காக இந்த வாய்ப்பை உபயோகிக்கின்றனர். அமெரிக்க அதிபர் சுட்டிக்காட்டியது போலவே இந்த பிளேக்கை உலகிற்கு கட்டவிழ்த்துவிட்ட தேசம்தான் கரோனாவை பொறுப்புக்கூற வேண்டும். இந்த வைரஸின் தோற்றத்தை மறைக்க, அதன் ஆபத்தை குறைக்க, மற்றும் விஞ்ஞான ஒத்துழைப்பை அடக்குவதற்கான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவு ஒரு உள்ளூர் தொற்றுநோயை உலகளாவிய தொற்றுநோயாக மாற்றியது.கரோனாவை எதிர்கொள்ள சபை உறுப்பினர்கள் "வெளிப்படைத்தன்மை மற்றும் நல்ல நம்பிக்கையுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஒவ்வொரு நாட்டின் தூதர்களும் பிற நாட்டினரை குற்றஞ்சாட்டி உரையாற்றியதால் ஐநா சபை கூட்டம் காரசாரமாக நடைபெற்றது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.