ETV Bharat / international

'கொடூரமான' சிறைச்சாலையில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே! - ஸ்டெல்லா மோரிஸ்

லண்டன்: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் 'கொடூரமான' சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரது கூட்டாளர் ஸ்டெல்லா மோரிஸ் தெரிவித்துள்ளார்.

"கொடூரமான" சிறைச்சாலையில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே!

author img

By

Published : Dec 13, 2020, 6:48 AM IST

விக்கிலீக்ஸ் என்ற செய்தி நிறுவனம் மூலம் அமெரிக்கா உள்பட உலகின் பல நாடுகளின் ஆவணங்களை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே. இவர் மீது அமெரிக்காவில் உளவுப்பார்த்தல் மற்றும் தகவலைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட 17 குற்றச்சாட்டுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே ஸ்வீடன் நாட்டிலுள்ள ஒரு பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அசாஞ்சே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், அவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், லண்டனிலுள்ள ஈக்வடார் நாட்டின் தூதரகத்தில் 2012ஆம் ஆண்டு தஞ்சமடைந்தார்.

பாலியல் குற்றச்சாட்டில் நீதிமன்றம் அளித்த பிணை நிபந்தனைகளை மீறிய வழக்கில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு லண்டன் நீதிமன்றம் 50 வாரங்களுக்குச் சிறை தண்டனை விதித்து பெல்மார்ஷ் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

அசாஞ்சே சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெல்மார்ஷ் 'மிகவும் ஆபத்தானது' என்றும் அப்பகுதியில் இருக்கும் மூன்று கைதிகளில் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாகவும் மோரிஸ் கூறியுள்ளார். மிகவும் கடுமையான குற்றங்கள் செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுடன் அசாஞ்சே சூழப்பட்டிருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சித்ரவதை, அரசின விதிமீறல் பற்றிய உண்மையான தகவல்களை வெளியிட்டதற்காக ஜூலியன் அசாஞ்சே மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று அவரது கூட்டாளியான ஸ்டெல்லா மோரிஸ் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும்பட்சத்தில் அசாஞ்சேவிற்கு அதிகபட்சமாக 175 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. அசாஞ்சேவிற்கு உதவ ஆஸ்திரேலிய அரசு ஒத்துழைக்கவில்லை என்று மோரிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான அடுத்த நீதிமன்ற விசாரணை திங்களன்று (டிச. 14) நடைபெறவுள்ளது. இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை முடிவடைந்து ஜனவரி 4ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அமைதி ஒப்பந்தத்தை மீறும் அமெரிக்கா - ஆப்கான் மீது தாக்குதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.